எம்பி-க்களுக்கு அசைவம்.. குழந்தைகளுக்கு ஏன் சைவம்? – மே.வங்கத்தில் வெடித்த மதிய உணவு சர்ச்சை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தில் மீண்டும் முட்டைகளை சேர்க்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டோலா சென், மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், அம்மாநில பள்ளிகளில் மதிய உணவு வழங்க இஸ்கான் அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த முட்டைகள் நீக்கப்பட்டு, சமீப வாரங்களாக சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இஸ்கான் அமைப்பு கடுமையான சைவ உணவு முறையைப் பின்பற்றுவதால், முட்டைக்கு பதிலாக பன்னீர் மற்றும் சோயாபீன்ஸ் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறைக்கு எதிராகவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டோலா சென் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர், நாடாளுமன்ற கேன்டீனில் எம்பி-க்களுக்கு அசைவ உணவு சாப்பிட உரிமை இருக்கும் போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் அந்த உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக மேற்கு வங்க கலாச்சாரத்தில் மீன் மற்றும் முட்டை முக்கிய உணவாக இருக்கும் நிலையில், முட்டை கொடுப்பதை தடுப்பது மேற்குவங்க குழந்தைகளின் அடிப்படை உணவு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் டோலா சென் சாடி இருக்கிறார்.

Related Stories: