சென்னை: எஸ்டிபிஐ கட்சி தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் பைஸி அறிக்கை: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ உணவுத் தானியம் வழங்கப்பட்டு வந்தது. புதிய திருத்தத்தின்படி, ஒரு நபருக்கு இவ்வளவுதான் என் கணக்கிடப்பட்டு, குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பாக அதே 35 கிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 35 கிலோ உணவுத் தானிய உரிமை எவ்வித குறைப்புமின்றி தொடர்ந்து வழங்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விடுபட்ட கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்குப் புதிய ரேஷன் அட்டைகளும், ஊட்டச்சத்துப் பொருட்களும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
