* இலங்கை-ஏ அணியுடன் நடக்கும் முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி) இந்தியா-ஏ அணி முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா-ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை-ஏ அணி 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 122 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா-ஏ அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன் எடுத்துள்ளது. சுதர்சன் (7) காயத்தால் வெளியேறிய நிலையில், ஆயுஷ் பாண்டே, படிக்கல் தலா 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
* நியூசிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடக்கும் 3வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்னுக்கு சுருண்டு 84 ரன் பின் தங்கியது (டக்கெட் 113, பெத்தெல் 74, புரூக் 58, அட்கின்சன் 23). நியூசி. பந்துவீச்சில் நாதன் ஸ்மித் 4, ஓ ரூர்கி, ஜாக் போல்க்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய பாகிஸ்தான் 37 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பேட் செய்த பாக். 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது (குல் பெரோஸா 63, ஆயிஷா 32). அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 16.1 ஓவரில் 88/5 என்ற நிலையில் இருந்து 18 ஓவரில் 89 ரன்னுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.
