×

பினராயி விஜயன் மகளிடம் இன்று திடீர் விசாரணை: அமலாக்கத்துறை அதிரடி

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்திடம் இருந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் முறைகேடாக ரூ. 2.78 கோடி பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி விசாரணை அலுவலகமும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 17ம் தேதி வீணா விஜயனை அமலாக்கத்துறை கொச்சி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியது. சுமார் 9 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் வீணா விஜயன் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வரும் 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கோரி வீணா விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கிடையே கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தீவிர மோசடி விசாரணை அலுவலகம் வசம் இருந்த இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் நேற்று அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்று உடனடியாக கொச்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி வீணா விஜயனுக்கு அமலாக்கத்துறை தகவல் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Binarai Vijayan ,Thiruvananthapuram ,Veena Vijayan ,Kerala ,Pinarayi Vijayan ,
× RELATED இந்தியாவில் அமேசான் நிறுவனம் 48 பில்லியன் டாலர் முதலீடு