×

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்க – ஜவாஹிருல்லா

சென்னை: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். தங்க மோதிரம் திட்ட நிதியை ஊரகப் பகுதி மருத்துவமனைகளின் பிரசவ வார்டை மேம்படுத்த பயன்படுத்துக என்று அவர் தெரிவித்துள்ளார். குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களே மக்களுக்கு உண்மையில் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Jawahirulla ,Chennai ,Humanist People's Party ,Tamil Nadu government ,
× RELATED FCRA சட்டத் திருத்தங்களுக்கு எதிரான நாடு...