×

சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

*வாகன ஓட்டிகள் அச்சம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி பஜார் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி பகுதிகளான சேரம்பாடி பஜார், சுங்கம், சேரங்கோடு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

மாடுகள் சாலைகளில் ஆக்கிரமித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஓட்டுநர்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:

சேரங்கோடு ஊராட்சியில் பலமுறை புகார்கள்அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடைகளை சாலைகளில் விடாமல் தங்களது குடியிருப்பு பகுதிகளில் வைத்து பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் இருக்கும் இந்த பிரச்னையில், சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்யாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Cherangode ,Pandalur ,Cherangode bazaar ,Nilgiris district ,Sungam ,Kolapalli ,Ayyankalli… ,
× RELATED சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்,...