×

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

 

தேனி, ஜூன் 16: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருகிற 19ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பட்டயப் படிப்பு என பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Tags : Theni ,Theni district ,District Collector’s Office… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...