×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: உறவினர் கைது

மாதவரம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏகவள்ளி (50). இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஏகவள்ளி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான ரவிக்குமார் என்பவர், திடீரென ஏகவள்ளி வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஏகவள்ளி அலறிக் கூச்சலிட்டார். இதுகுறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, ஏகவள்ளிக்கு பாலியல் தொல்லை செய்த உறவினரான ரவிக்குமார் (42) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Ekavalli ,Vyasarpadi ,
× RELATED முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி...