×

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் பலி, 171பேர் காயம்

துபாய்: ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 171 பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி தீவிரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்றது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனில் ஹவுதி தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 74பேர் உயிரிழந்துள்ளனர். 171 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகவும் இதனை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்ததாகவும் தெரிவித்துள்ளது.

The post ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் பலி, 171பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : US ,attack on ,Yemen oil port ,Dubai ,Ras Issa oil port ,Yemen ,Hamas ,Houthi ,Yemen… ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்