×

உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மாற்றாக தனக்கென சொந்த விண்வெளி நிலையத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு நிலையம் வரும் 2030ல் விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவுவதற்கான தொழில்நுட்பத்திற்கு ரஷ்யா காப்புரிமை பெற்றுள்ளது. இது குறித்து அதிபர் புடினுடன் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் கூறுகையில், ‘‘ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் உலகிலேயே முதல் முறையாக டிரோன் ஏவுதளம் அமைக்கப்படும். இது ரோபோக்களால் பராமரிக்கப்படுகிறது. இங்கிருந்து டிரோன்களை ஏவுவதற்கான தொழில்நுட்பத்திற்கு ரஷ்ய கூட்டமைப்பில் இருந்து காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் விண்வெளி ஆய்வு நிலையத்தில் சோதிக்கப்பட்டு, பின்னர் நிலவு சோதனை திட்டத்திலும் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

The post உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,International Space Station ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...