×

உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து

டெல்லி: உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்; நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்

நடப்பு தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி , லீக் சுற்றில் எதிர்த்து விளையாடிய 9 அணிகளையும் துவம்சம் செய்து புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றையும் மாற்றி எழுதிய ரோகித் மற்றும் கோ, 4வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி 5 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை இன்று இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீழ்த்தி இந்திய 3வது முறையாக மகுடம் சூடும் என ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்; நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள்.

இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது, ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது” என இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

The post உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Australia ,World Cup ,Delhi ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா