×

தமிழகத்தை நெருங்கியது ஆழ்ந்த காற்றழுத்தம்: கடலோரத்தில் மழை நீடிக்கும்

சென்னை: இலங்கையின் காங்கேசன் துறையில் நேற்று நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செயலிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி, நெடுந்தீவு பகுதியில் நீடித்துக் கொண்டு இருந்தது. இன்று காலையில் அது வட மேற்கில் நகர்ந்து ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் கடலோரத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. பின்னர் படிப்படியாக உள் மாவட்டங்களிலும் பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நேற்று இரவு காங்கேசன் துறையில் செயலிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது ராமநாதபுரம் கடல் பகுதிக்கு வந்துள்ளது. அதன் காரணமாக கடலோரத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் காசர்கோடு-மங்களூர் இடைப்பட்ட பகுதியில் தற்போது ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக கிழக்கு காற்று மேற்கு நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. பாலக்காட்டு கணவாய் வழியாக சென்று கொண்டு இருப்பதால் மேற்கு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் பலமான மூடுபனி பெய்தது.

நேற்று காங்கேசன் துறையில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செயலிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மாக மாறி, நெடுந்தீவு பகுதியில் நீடித்துக் கொண்டு இருந்தது. இன்று காலையில் அது வட மேற்கில் நகர்ந்து ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. மன்னார் வளைகுடாப் பகுதியில் தற்போது நுழையப் போகிறது. இது மேலும் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் கடலில் இரு காற்று இணைவு நடக்கிறது. இதையடுத்து, சென்னையில் மதியத்தில் மழை பெய்யும் நிலை உருவாகும்.

புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும். மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களின் வடக்கு பகுதிகளில் மதிய நேரத்தில் மழை பெய்யும். மாலையில் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்யும். குளிர் அதிகமாக இருப்பதால், வெப்பம் வந்தால் தான் மழை பெய்யும் வாய்ப்பு சில இடங்களில் உள்ளது. மதியத்துக்கு மேல் அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. ஏற்ற இறக்கத்துடனும் சில இடங்களில் மழை பெய்யும்.

Tags : Tamil Nadu ,Chennai ,Kankesan ,Sri Lanka ,Neduntheevu ,Ramanathapuram ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!