×

உலக ஏதிலிகள் தினம் போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: உலக அகதிகள் தினத்தையொட்டி போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள், மனிதத்தை கொல்லும் போர்களால் வாழ்விழந்து அகதிகளாய் புலம் பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்.

நமது திராவிட மாடல் அரசில் ‘அகதிகள் முகாம்’ என்பதை ‘மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றி அன்னை தமிழ் உறவுகளின் மாண்பை போற்றினோம். வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம். போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்.’’இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

The post உலக ஏதிலிகள் தினம் போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : World Refugee Day ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து