- பெண்கள் T20 ஆசிய கோப்பை
- இமயமலை
- தம்புள்ளை
- டி20 ஆசிய்கப் தொடர்
- பெண்கள் ஆசிய கோப்பை தொடர்
- இலங்கை
- தின மலர்
தம்புல்லா: மகளிர் டி20 ஆசியக்கோப்பை தொடரின் லீக் மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி இமாலய வெற்றி பெற்றது. 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், யுஏஇ அணிகளும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ பிரிவில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் 2வது இடத்திலும் உள்ளது. இந்த 2 அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. பி பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் இலங்கை அணி முதலிடத்திலும் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் வங்கதேச அணி 2வது இடத்திலும் உள்ளது. இரவு 7 மணிக்கும் தொடங்கும் போட்டியில் இலங்கை – தாய்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியின் முடிவு குறித்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான அரையிறுதி போட்டிகள் முடிவாகும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் – மலேசிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. திலாரா அக்டர் மற்றும் முர்ஷிதா காதுன் ஆகியோர் களமிறங்கினர். அந்த அணி 65 ரன்கள் எடுத்திருந்தபோது திலாரா அக்டர் 33 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து முர்ஷிதா காதுன் மற்றும் நிகர் சுல்தானா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. காதுன் 80 ரன்களையும், கேப்டன் சுல்தானா 62* ரன்களையும் எடுத்தனர். இமாலய இலக்கை துரத்திய மலேசிய அணி, வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்படி வங்கதேச அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
The post மகளிர் டி20 ஆசியக்கோப்பை: மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி இமாலய வெற்றி appeared first on Dinakaran.