×

பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சமூக நலத்துறையின் சார்பில், 2024ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது தமிழ்நாடு முதல்வரால் உலக மகளிர் தினவிழா மார்ச் 2025ல் வழங்கபடவுள்ளது.

மேற்படி, விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவாக அறிக்கையுடன் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து, அதன் 2 நகல் மற்றும் சமூகப்பணியாளர் இருப்பிடத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று டிசம்பர் 31ம்தேதிக்குள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் 6.1.2025க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், (பழைய ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடம் முதல் தளம் மாவட்ட ஆட்சியரகம் வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் இருபிரதிகளை நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram District ,Tamil Nadu Social Welfare Department ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...