சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் 1.15 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பொதுமக்கள் பயன்பெறும்போது எப்படி அது பெயரளவில் உள்ளது என்று கூற முடியும்?. காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது. குஜராத் துறைமுகத்தில் பல லட்சம் கோடி போதைப் பொருட்கள் சிக்கியது. வெற்றிபெறுவேன் என்று அண்ணாமலை கனவுகாண்பது அவரது உரிமை, ஆனால் வெற்றி பெறுவது நாங்கள்தான். முதலமைச்சரின் திட்டங்களை நம்பித்தான் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது திமுக எனவும் கூறினார்.
The post மகளிர் உரிமைத் தொகையால் 1.15 கோடி பெண்கள் பயன்: கனிமொழி appeared first on Dinakaran.