×
Saravana Stores

காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவருக்கு 20 வயதில் மகள் இருக்கிறார். இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரது மகன் பாலாஜி (20) கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்க வலியுறுத்தி ஜெயந்தியின் மகள் பின்னால் சுற்றி வந்துள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஜெயந்தி மற்றும் அவரது மகள் இருவரும் இருந்தபோது அங்கு சென்ற பாலாஜி, இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட ஜெயந்தியை ஆபாச வார்த்தைகளால் பாலாஜி திட்டியுள்ளார். மேலும், என் வழியில் குறுக்கே வந்தால் கல்லால் அடித்து கொலை செய்வேன் எனவும் ஜெயந்தியை அவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். அதன் அடிப்படையில், உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று பாலாஜியை கைது செய்தனர்.

The post காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Jayanthi ,Mambakkam ,Madhavan ,Balaji ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி ஆசாமிகள் நகை...