×
Saravana Stores

மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது

திருமலை : மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரத்தில் 14 மாத பெண் குழந்தையை தந்தை கழுத்து நெரித்து கொைல செய்தார்.
தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், பிஜினபள்ளி மண்டலம், கிம்யா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கெட்டவத் திருப்பதி (32). இவருக்கும், சிவலி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் சுமூகமாக சென்றது. இதற்கிடையில் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. சில மாதங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது கெட்டவத் திருப்பதி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சிவலி கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெட்டவத் திருப்பதி ஐதராபாத் சென்று தன்னுடன் குடும்ப நடத்த வரும்படி மனைவியை அழைத்துள்ளார். ஆனால் சிவலி வரமாட்டேன் என்று கூறியதால், 14 மாத குழந்தையான சசிகலாவை கையில் எடுத்து கொண்டு கெட்டவத் திருப்பதி ஆட்டோவில் தனது கிராமத்திற்கு புறப்பட்டார்.

அப்போது, மீண்டும் மனைவி போனில் பேசாததால், ஆத்திமடைந்த அவர், பிஜினப்பள்ளி புறநகர் பகுதியில் ஆட்டோவில் இருந்த 14 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் குழந்தையின் சடலத்துடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இதுகுறித்து பிஜினப்பள்ளி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் வழக்கு பதிவு செய்து கெட்டவத் திருப்பதையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

The post மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Ketavath Tirupati ,Kimya Thanda Village, ,Bijinapalli Mandal, Nagar Kurnool District, Telangana State.… ,
× RELATED திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்