×

நித்யானந்தா எங்கே உள்ளார் என நீதிபதிகள் கேள்வி

மதுரை: கைலாசா எங்கு உள்ளது அங்கு எப்படி செல்வது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆஸ்திரேலியா அருகே யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளதாக அவரது ஆசிரமத்தின் சீடர் பதில் அளித்துள்ளார். கைலாசாவிற்கு மனுதாரர் சென்று உள்ளாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கைலாசாவுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் உள்ளதாகவும் நித்யானந்தாவின் சீடர் பதிலளித்தார். திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

The post நித்யானந்தா எங்கே உள்ளார் என நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Nithyananda ,Madurai ,Court ,Kailash ,USK ,Australia ,Kailash… ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...