×

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பாதுகாப்பு தரும் ரஷ்ய ராணுவம்: கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களை அனுப்பி ரஷ்யா அதிகம்!

பெனின்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ரஷ்யா தனது ராணுவத்தின் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. நைஜர், புர்கினா பாசோ, மாலி போன்ற சகாரா பாலைவனத்தை ஒட்டிய நாடுகளில் ராணுவ ஆட்சியாளர்களுக்கு அல்கைதா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். இவர்களை சமாளிப்பதற்காக தான் ரஷ்யா ராணுவ வீரர்களையும், பாதுகாப்பு தளவாடங்களையும் அனுப்பி உதவி வருகிறது. ஆப்பிரிக்கா காப்ஸ் என்ற ரஷ்ய ராணுவத்தின் துணை பிரிவே மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பணியாற்றி வருகிறது. பிரமாண்டமான கப்பல்களில் பீரங்கிகள், ஏவுகணைகள் போன்ற தடவாளங்கள் ரஷ்யாவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு எடுத்து செல்லப்படுவதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக புகழ் பெற்ற செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே உதவி கொண்டு இருந்தன. தற்போது அவர் விலகி விட்ட நிலையில், அந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா பிடித்து கொண்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடனுதவி தந்து சீனா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ராணுவ ரீதியாக ரஷ்யா தங்கள் பிடியில் வைத்திருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெறுகிறது. மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ராணுவ பொருளாதார அரசியல் ரீதியில் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தர உதவியாக இருக்கும் என்றும் ரஷ்யா கருதுகிறது.

The post மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பாதுகாப்பு தரும் ரஷ்ய ராணுவம்: கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களை அனுப்பி ரஷ்யா அதிகம்! appeared first on Dinakaran.

Tags : Russia ,Benin ,Sahara Desert ,Niger ,Burkina Faso ,Mali ,Al-Qaeda ,IS ,Dinakaran ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி