×

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவு

திண்டுக்கல்: பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்கு 28.05.2025 முதல் 24.09.2025 வரை 120 நாட்களுக்கு, நீரிழப்பு உட்பட 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என்று தெரிவித்துள்ளது.

The post பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government ,Dindigul ,Tamil Nadu government ,Balaru Mathalaru Dam ,Dindigul district ,Palani Vatom ,Dadakulam Canal ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்