×

போர் பதற்றம்.. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு..!!

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் வசிக்கும் அமெரிக்க மக்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்படி, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளன. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; லாகூரில் உள்ள ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக வந்த செய்திகள், சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் வான்வெளியில் ஊடுருவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய தகவல்கள் காரணமாக, லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.

மோதல்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் வெளியேற வேண்டும். வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் எங்கள் செய்தி அமைப்பு மூலம் தகவல்கள் அனுப்பப்படும். ஸ்மார்ட் டிராவலர் சேர்க்கை திட்டத்தில் (STEP) நீங்கள் சேர்ந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பான தங்குமிடம் தேடிக்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசாங்க உதவியை நாடாத பிற வெளியேற்றத் திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போர் பதற்றம்.. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Americans ,Lahore ,Pakistan ,Lahore, Pakistan ,Pahalkam attack ,Indian Army ,Operation Chintour ,
× RELATED வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு