×

பெர்லின் டென்னிஸ் ஓபன் வாங் ஸிங்யு, மார்கெடா அரையிறுதிக்கு தகுதி

பெர்லின்: பெர்லின் டென்னிஸ் ஓபன் காலிறுதியில் நேற்று, சீன வீராங்கனை வாங் ஸிங்யு, செக் வீராங்கனை மார்கெடா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெர்லின் டென்னிஸ் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு காலிறுதிப் போட்டியில் செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவா, துனீஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜேப்யுர் மோதினர்.

இப்போட்டியில் நேர்த்தியாக ஆடிய மார்கெடா, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னறினார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோஸா, சீன வீராங்கனை வாங் ஸிங்யு மோதினர். முதல் செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வாங் எளிதில் கைப்பற்றினார். அப்போது காயமடைந்திருந்த படோஸா, பாதியில் வெளியேறினார். அதையடுத்து, வாங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரை இறுதிக்கு முன்னேறினார்.

 

The post பெர்லின் டென்னிஸ் ஓபன் வாங் ஸிங்யு, மார்கெடா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Berlin Tennis Open ,Wang Xingyu ,Marketa ,Berlin ,Berlin, Germany ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்...