×

கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

கர்நாடக: 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 224 தொகுதிகளில் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.

The post கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..! appeared first on Dinakaran.

Tags : Karnataka Chatabera Election ,Karnataka ,Legislative Assembly ,Karnataka Assembly Election ,Dinakaran ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!