×

செல்போன் நம்பர் இல்லாமல் டிவிட்டரில் வீடியோ ஆடியோ கால் வசதி; எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன்: செல்போன் நம்பர் இல்லாமல் டிவிட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது டிவிட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் டிவிட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post செல்போன் நம்பர் இல்லாமல் டிவிட்டரில் வீடியோ ஆடியோ கால் வசதி; எலான் மஸ்க் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Twitter ,Elon Musk ,Washington ,Dinakaran ,
× RELATED யூனிட்டுக்கு கூடுதல் வசூல் முடிவை கைவிட டிடிவி.தினகரன் வலியுறுத்தல்