- கவர்னர்
- துணைவேந்தர்கள் மாநாடு
- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- உச்ச நீதிமன்றம்
- நீலகிரி ஆளுநர் மாளிகை
- தின மலர்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், வரும் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி பங்கேற்பார் என்றும் அறிவித்திருப்பது ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது.
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் அறிவித்தது அதிகார அத்துமீறல்: முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.
