×

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

வேலூர்: வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோதல் காரணமாக ஆந்திர செல்லும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே மரங்கள், கற்களை போட்டு போக்குவரத்தை துண்டித்துள்ளனர். தற்போது சித்தூர் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய பந்த் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து செல்லக்கூடிய அரசு, தனியார் மற்றும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்கள் GO BACK CHANDIRABABU NAIDU என்ற முழக்கத்தை எழுப்பினர் இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் தெலுங்கு தேச கட்சி தொடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற காவல்துறையினரும் அம்மோதலில் படுக்கமடைந்துள்ளார்.

சுமார் 50க்கும் மேற்பட்டார்கள் காயமடைந்திருக்கின்றார்கள். இந்த மோதலின் போது காவல்துறை வாகனங்கள், போது வாகனங்களுக்கும் தீ ஊற்றி கொளுத்தி உள்ளார், இதன் எதிரொலியாக இன்றைக்கு தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல் காரணமாக இன்றைக்கு ஆந்திர மாநிலத்திற்கு பந்த் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் முழுமையாக கடைகள் அடைப்பு மற்றும் முழு போக்குவரத்து நிர்த்தமானது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் அண்டை மாவட்டமான அருகில் இருக்கக்கூடிய தமிழகத்தை ஒட்டி இருக்கக்கூடிய வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இயக்கக்கூடிய அணைத்து பேருந்துகளும் தற்போதைக்கு வேலூர் புதிய பேருந்து நிலையத்திலும், குடியார்தம் பகுதியில் இருந்து இயக்கக்கூடிய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tirupati, Chittoor ,Andhra Pradesh ,Tirupati ,Chittoor ,YSR Congress ,
× RELATED அரூர் பகுதியில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் பீதி