×

வேளாங்கண்ணி பேராலயம் வண்ண மின்விளக்கு அலங்காரம்: 29ம்தேதி கொடியேற்றம்

நாகப்பட்டினம்: புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள கட்டிட கலையில் பசலிக்கா என்ற அந்தஸ்தை வேளாங்கண்ணி பேராலயம் பெற்றுள்ளது. வங்க கடல்கரையில் அமைந்துள்ளது.இவ்வாறு பல்வேறு புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி மாலை கொடியேற்றதுடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி செப்டம்பர் மாதம் 7ம் தேதி இரவு நடைபெறும்.

இவ்வாறு 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அன்னையின் அருளாசியை பெற லட்சகணக்கான பக்தர்கள் தினந்தோறும் வேளாங்கண்ணியில் திரண்டு நிற்பார்கள்.இதன்படி இந்த ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கவுள்ளாலர்கள். இதை தொடர்ந்து திருத்தலம் கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படும். பின்னர் பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர்லம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடையும். அங்கு பக்தர்கள் ஆவே மரியா, மரியே வாழ்க என்ற கோஷம் விண்ணைதொடும் அளவிற்கு எழுப்ப ஆண்டுபெருவிழா கொடியேற்றப்படும்.

இவ்வாறு மிகவும் சிறப்புடன் நடைபெறும் கொடியேற்றத்தை காண லட்சகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருகை தந்து திரண்டு நிற்பார்கள். இவ்வாறு புகழ் பெற்ற ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வர்ணம் பூசும் பணி நிறைவு பெற்றது.இதை தொடர்ந்து பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதை காண்பதற்காக தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயம் வருகின்றனர்.

The post வேளாங்கண்ணி பேராலயம் வண்ண மின்விளக்கு அலங்காரம்: 29ம்தேதி கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Velankanni Cathedral ,Nagapattinam ,Arogya ,Annai Paralaya ,Velankanni ,Bengal ,Velankanni Arogya Anai Paralayam ,
× RELATED ஆண்டு பெருவிழாவையொட்டி விண்ணை...