×

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

 

கோவை, மே 18: கோவை வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணியானது நேற்று துவங்கியது.
கோவை வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள 42 பிளாக்குகளில் நேற்று துவங்கியது.

இந்த பணிக்காக வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியை சேர்ந்த இளங்கலை வனவியல் மாணவர்கள் ஆகியோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபட உள்ள 7 வனச்சரக அலுவலர்கள், 84 வனப்பணியாளர்கள் மற்றும் 88 தன்னார்வலர்கள், தன்னார் தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கு ஏற்கனவே எவ்வாறு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வது என்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், நேற்று பிளாக் வாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யானைகள் கணக்கெடுப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இன்று பிளாக் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட வழியில் 2 கிமீ தூரம் நடந்து சென்று வரிகளின் இருபுறமும் உள்ள யானை சாணங்களை கண்டறிந்து மறைமுக கணக்கெடுப்பும், நாளை நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணிகளும் நடக்கிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

The post கோவை வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Coimbatore Vanakottam ,Coimbatore ,Coimbatore Forest Reserve ,Coimbatore forest ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...