×

ஆய்வுக்கூட கட்டுமான பணி துவக்கம்

 

தொண்டாமுத்தூர், செப்.11: கோவை அருகே சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.65.95 லட்சத்தில் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது. இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

உடன் மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம், சர்க்கார் சாமகுளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், நகர செயலாளர் சுரேந்திரன், பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, துணை தலைவர் மணி (எ) விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆய்வுக்கூட கட்டுமான பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Bhumi Pooja ,Govilpalayam Government Higher Secondary School ,Sarkar Chamakulam Municipality ,Coimbatore ,Ganapathi Rajkumar ,Coimbatore North District ,DMK ,Dinakaran ,
× RELATED மருதமலை கோயிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்