×

கோவையில் சணல் கண்காட்சி துவக்கம்

 

கோவை, செப்.13: சணல் தயாரிப்புகளின் டிஸ்ப்ளே கம் விற்பனையை உள்ளடக்கிய “ஜூட் பேர்’’ கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம், அரியானா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  அதன்படி, கோவையில் தேசிய சணல் வாரியம் சார்பாக சணல் கண்காட்சி கோவை பாப்பநாய்க்கன்பாளையம் மீனாட்சி மண்டபத்தில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

வரும் 16ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் சுமார் 20 குறு சணல் தொழில்முனைவோர், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ சணல் தொழிற்சாலைகள், சணல் கைவினைப் பொருட்கள், சணல் பரிசு மற்றும் புதுமையான பொருட்கள், ஆடம்பர சணல் பைகள், சணல் ஷாப்பிங் பைகள், சணல் சுவர் தொங்குதிரைகள், வீட்டு ஜவுளி, சணல் காலணிகள், சணல் தரை உறைகள், பாய்கள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு சணல் நுகர்வோர் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தேசிய சணல் வாரிய துணை இணை இயக்குனர் திபூத் முஹர்ஜி, இணை இயக்குனர் கிஷன் சிங் கோஜுவால், செயலளர் ஷகி புஜன் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கோவையில் சணல் கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Jute Exhibition ,Coimbatore ,Jude Bare ,Karnataka ,Tamil Nadu ,Telangana ,Kerala ,West Bengal ,Ariana ,National Jute Board ,Dinakaran ,
× RELATED ஆகாய தாமரையால் மூடி கிடக்கும் முத்தண்ண குளம்