×

யுடிடி டேபிள் டென்னிஸ் அகமதாபாத்தில் இன்று துவக்கம்

அகமதாபாத்: இந்தியன் ஆயில் யுடிடி டேபிள் டென்னிஸ் போட்டிகள் அகமதாபாத்தில் இன்று துவங்குகின்றன. இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் இந்தியன் ஆயில் யுடிடி டேபிள் டென்னிஸ் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள ஈகேஏ அரீனா மைதானத்தில் இன்று துவங்குகின்றன. முதல் போட்டியில் டெல்லி தபாங், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதைத் தொடர்ந்து நடக்கும் 2வது போட்டியில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், அகமதாபாத் எஸ்ஜி அணிகள் களம் காண்கின்றன. 18 நாட்கள் நடக்கும் இத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி, ஜூன் 15ம் தேதி நடக்கிறது. இப்போட்டிகளில் சென்னை லயன்ஸ் அணி மோதும் போட்டிகள், ஜூன் 2, 3, 5, 7, 9 தேதிகளில் நடைபெறும்.

The post யுடிடி டேபிள் டென்னிஸ் அகமதாபாத்தில் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : UDT Table Tennis ,Ahmedabad ,Indian Oil UDT Table Tennis Tournament ,EKA Arena ,Dinakaran ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி