×

அர்பன் குரூசர் ஹைரைடர் மற்றும் இனோவா ஹைகிராஸ் காரின் விலை உயர்வு..!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், தனது அர்பன் குரூசர் ஹைரைடர் மற்றும் இனோவா ஹைகிராஸ் ஆகியவற்றின் விலையை ரூ.60,000 வரை உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வின்படி ஷோரூம் துவக்க விலையாக அர்பன் குரூசர் ஹைரைடர் ரூ.10.73 லட்சம் எனவும், இனோவா ஹைகிராஸ் ரூ.18.55 லட்சம் எனவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுபோல் கிளான்சா விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டு, ஷோரூம் விலையாக சுமார் ரூ.6.71 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கேம்ரி ரூ.46,000 வரை உயர்த்தப்பட்டு ஷோரூம் விலையாக சுமார் ரூ.45.71 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் அர்பன் குரூசர் ஹைரைடர், தென்னாப்ரிக்காவில் சந்தைப்படுத்தப்ட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எக்ஸ்எஸ், எக்ஸ்ஆர் மற்றும் எக்ஸ்ஆர் ஏடி என 3 வேரியண்ட்கள் உள்ளன. ஆனால், தென்னாப்ரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலில் ஆல்வீல் டிரைவ், 360 டிகிரி கேமரா மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அர்பன் குரூசர் ஹைரைடர் மற்றும் இனோவா ஹைகிராஸ் காரின் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Toyota Kirloskar Motor ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...