×

விஜய் மணல் கோட்டை சரியும் வைகோ உறுதி

மதுரை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய் உள்ளிட்ட அனைவருக்கும், அரசியலுக்கு வர உரிமையுண்டு. அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன். ஆனால் அரசியலில் சாதித்து விடலாம் என கடற்கரையில் விஜய் கட்டும் மணல்கோட்டை எப்போது வேண்டுமானாலும் சரியும். எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதுடன், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இம்மண்ணிலிருந்து ஒருபோதும் யாராலும் அகற்ற முடியாத சக்தியாக திமுக உள்ளது. ஆட்சியில் பங்கு என்பதில், எங்களுக்கு உடன்பாடில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vijay Sand Castle ,Madurai ,Madura ,Secretary General ,Wiko ,Vijay ,
× RELATED சொல்லிட்டாங்க…