- சசிகலா
- டிடீவி
- OPS
- எடப்பாடி
- நாகர்கோவில்
- எடப்பாடி பழனிசாமி
- குமாரி மாவட்டம் ஆட்டமுக
- ஓ.
- பன்னீர் செல்வம்
- தின மலர்
நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் சிலர் கடிதம் அனுப்பி வருகிறார்கள். இதில் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்கா விட்டால் தங்களது கட்சிப் பதவியை தாங்களே பறித்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் புத்தளம் பேரூர் அதிமுக செயலாளர் குமரேசன் அனுப்பி உள்ள கடிதத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரின் நீக்கத்தை மறுபரிசீலனை செய்து மூவரையும் கட்சியில் இணைக்க வேண்டும். இவர்கள் மூன்று பேரையும் கட்சியில் இணைக்காவிட்டால் தற்போது பேரூர் செயலாளராக இருக்கும் எனது கட்சிப் பதவியையும் பறித்து விடுங்கள் என கூறி இருக்கிறார். இதே போல மேலும் சில நிர்வாகிகளும் மூவரையும் கட்சியில் சேர்க்காவிட்டால் தங்களது பதவிகளை பறித்துக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
