×

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் அடுத்த மாதம் 26ம்தேதி மதிப்பீட்டு தேர்வு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு-2026க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை அடுத்த மாதம் 26ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.7500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டைபோலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) சேர்க்கை மதிப்பீடுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பம் பின்னர் தனியாக வெளியிடப்படும்.

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையை படித்து பார்த்து, 26ம் தேதி (நேற்று) முதல் விண்ணப்பித்தல் தொடங்கி
யுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 10ம் தேதி. நுழைவு சீட்டு ஜூலை மூன்றாவது வாரம் வெளியிடப்படும். தேர்வு அடுத்த மாதம் 26ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் அடுத்த மாதம் 26ம்தேதி மதிப்பீட்டு தேர்வு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Skill Development Corporation ,Chennai ,Naan Multhavan Competitive Examinations Division ,UPSC ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...