×

ட்விட்டருக்கு சந்தா செலுத்தாததல் போப் பிரான்சிஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம்!

வாஷிங்டன் : இந்தியா உட்பட உலகம் முழுவதும் ட்விட்டருக்கு சந்தா செலுத்தாதன் காரணமாக போப் பிரான்சிஸ், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தை பொறுத்தவரை ப்ளூ டிக் உள்ள கணக்குகள் அதிகாரப்பூர்வமானவை என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதை கொண்டு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை அடையாளம் கண்டு லட்சக்கணக்கானோர் அவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்ற பின்பு ப்ளூ டிக்கிற்கு சந்தா வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், சந்தா செலுத்தாததாக கூறி உலகம் முழுவதும் ஏரளாமான பிரபலங்களின் பெயர்களுக்கு பின்னால் இருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. போப் பிரான்சிஸ் தொடங்கி ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங், அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் ஓப்ரா வின்ப்ரே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாரூக் கான், அமிதாப் பச்சன், ஆலியா பட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது. ரூ. 600 முதல் ரூ.900 வரை சந்தா கட்டாடதாலேயே ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதனால் பலர் சந்தா செலுத்தி ப்ளூ டிக்கை மீட்டு வருகின்றனர். அதே சமயம் தனக்கு ப்ளூ டிக் தேவையில்லை என ட்வீட் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பயணம் தொடரும் என கூறியுள்ளார்.

The post ட்விட்டருக்கு சந்தா செலுத்தாததல் போப் பிரான்சிஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Twitter ,Pope Francis ,G.K. Blue ,Stalin ,Rahul Gandhi ,Rajinikanth ,Washington ,D.C. ,India ,G.K. Stalin ,Raqul Gandhi ,B.C. ,
× RELATED போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிப்பு