- தஞ்சாய்
- சமயபுரம் கோயில்
- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- Tanjai
- வலம்பக்குடி
- புதுக்கோட்டை மாவட்டம்
- கந்தர்வகோடா
- கன்னுகுடி பார்
- திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில்
- தஞ்சாவூர்
- தஞ்சை
- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
தஞ்சை: வளம்பக்குடியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் இறந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, கண்ணுக்குடி பட்டியையைச் சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தவழியே வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
சரக்கு வாகனம் மோதியதில் மீனா, ராணி, மோகனாம்பாள், முத்துசாமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த லட்சுமி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.