×

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 – 12 வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. பட்டயம், தொழிற்படிப்பு படிக்கும் திருநங்கை, திருநம்பிகள், இடைபாலினர்கள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

The post புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...