×

பல் பிடுங்கிய விவகாரம்: குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை தர ஆணை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

மதுரை: பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவியல் நீதிபதிக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விவரங்களை தனக்கு வழங்க உத்தரவிட கோரி அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, மனு நிராகரிக்கப்பட்டதா? என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பினார்.

குற்றவழக்குகளில் சிக்கியவர்கள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தனது நான்கு பற்கள் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பாக இவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு சென்ற பொது தான் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பலவீர் சிங் ஆகியோர் இணைந்து அம்பாசமுத்திரம் விகே புரம் காவல் நிலையத்தில் வைத்து அடித்து பற்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தன்மீது பதியப்பட்ட வழக்கின் விவரங்கள் என்ன? தன்னை சிறைக்கு அனுப்பும் போது காயங்கள் குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அதன் விவரங்களை தர கோரி அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரணை செய்த குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால் தங்களது வழக்கு விவரங்களை தர முடியாது என நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்மீது பதியப்பட்ட முழு விவரங்களையும் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் பொதுநல சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆஜராகி இந்த வழக்கில் அருண் மீது பதியப்பட்ட இந்த வழக்கின் விவரங்களை கேட்பது ஒவ்வொருவரின் உரிமையாகும்.

ஆனால் விவரங்களை தர மறுப்பது சட்ட விரோதம் எனவே உயர்நீதிமன்றம் அம்பாசமுத்திர நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இவர் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இதனை பதிவு செய்து தான் நீதிபதி இளங்கோவன் தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக அருண்குமார் கொடுக்கப்பட்ட மனு மீது குற்றவியல் நீதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார், அவர் மனு நிராகரிக்கப்பட்டதா? இல்லை ஏதேனும் வழக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை குறித்த விரிவான விளக்க அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என குற்றவியல் நீதிபதிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரம்: குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை தர ஆணை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : High Court Madurai Branch ,Madurai ,Balveer Singh ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...