×

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: சித்திரை மாதத்தையொட்டி பதிவுத்துறை நடவடிக்கை


சென்னை: பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட அறிக்கை: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான நாளை அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று, சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: சித்திரை மாதத்தையொட்டி பதிவுத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Registration Department ,Chithirai ,Chennai ,Head ,Registration ,Department ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...