- நெல்லையப்பார் கோயில்
- நெல்லல்யா போலீஸ்
- நெல்லா
- நெல்லை மாநகரக் காவல்
- துணை ஆணையாளர்
- பிரசன்னா குமார்
- நெலால காவல்துறை

நெல்லை: நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்தாண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும். தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்டுகள் அணிந்து வரக்கூடாது. 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்று கூறினார்.
The post நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது: நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
