- ஜி.கே.
- மணி
- சென்னை
- காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
- பென்னாகரம் சட்டமன்றம்
- GKMani
- பென்னாகரம்
- தின மலர்

சென்னை: காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதாவது: பெண்ணாகரம் தொகுதியில், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. இங்கே ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் என்பது 28 பணியிடங்கள். அதில் தற்போது பணியாற்றக் கூடியவர்கள் வெறும் 13 பேர். காவலர்களின் எண்ணிக்கையை அரசு கூடுதலாக்க வேண்டும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்கள், அருகிலிருக்கிற ஆந்திரா மாநிலங்களில், எல்லா சமுதாயத்திற்கும் அங்கே வாரியங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரண மது ஒழிப்பு வேண்டும். ஆகவே, மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.
The post மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜி.கே.மணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
