×

செனாப் நதி நீரை மொத்தமாக தடுக்க ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலனை: பாகிஸ்தானுக்கு அடுத்த இடி

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து செனாப் நதியில் ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகின்றது. ஜம்முவின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரையிலும் இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிந்து நதியில் இருந்து இந்தியா பெறும் நீர் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது செனாப் நதி நீரை இந்தியா பெரும்பாலும் பாசனத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது. இனி எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியா தனது தற்போதைய நீர்மின் திறனை 3000 மெகாவாட்டாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாககூறப்படுகின்றது. இதற்காக ரன்பீர் கால்வாயின் நீளத்தை 120கி.மீ. ஆக அதிகரிப்பதும் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். கதுவா, ரவி, பராக்வால் கால்வாய்களிலும் தூர்வாரும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post செனாப் நதி நீரை மொத்தமாக தடுக்க ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலனை: பாகிஸ்தானுக்கு அடுத்த இடி appeared first on Dinakaran.

Tags : India ,Ranbir Canal ,Chenab river ,Pakistan ,New Delhi ,Union government ,Pahalgam, Jammu ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...