×

டிஎன்பிஎல் டி20 இன்று துவக்கம்: 8 அணிகள் மோதல்

சென்னை: தமிழ் நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது தொடர் கோவையில் இன்று துவங்குகிறது. ஐபிஎல் போன்று மாநில அளவில் டி20 கிரிக்கெட் லீக் போட்டியை முதன்முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற மாநிலங்கள் அளவிலான டி20 லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியின் 9வது தொடர் இன்று கோயமுத்தூரில் தொடங்குகிறது. இப்போட்டிகளில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை கோவை, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் என 4 வெளி மாவட்டங்களில் நடைபெறும். பிளே ஆப் சுற்று ஜூலை 1, 2, 4 தேதிகளிலும், இறுதிப் போட்டி, ஜூலை 6ம் தேதியும் திண்டுக்கல்லில் நடக்கும்.

அணிகள்
1. திருச்சி கிராண்ட் சோழாஸ்
2. சேலம் ஸ்பார்டன்ஸ்
3. கோவை கிங்ஸ்
4. திண்டுக்கல் டிராகன்ஸ்
5. மதுரை பேந்தர்ஸ்
6. நெல்லை ராயல் கிங்ஸ்
7. திருப்பூர் தமிழன்ஸ்
8. சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

The post டிஎன்பிஎல் டி20 இன்று துவக்கம்: 8 அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : TNPL T20 ,Chennai ,Tamil Nadu Premier League ,TNPL ,T20 cricket ,Coimbatore ,Tamil Nadu Cricket Association ,TNCA ,T20 cricket league ,IPL ,Dinakaran ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...