×

திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு: ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை: திருப்பதியை போன்று திருவண்ணாமலை கோயிலில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவண்ணாமலை கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகையி தருகின்றனர்.

இதனால் சாமி தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கக்கூடிய நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக கோவில் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மன் கோபுரம் அருகே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெளியூர் பக்தர்கலின் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய உள்ளூர் வாசிகள் சாமியை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தரும் வெளியூர் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கூட்ட நெரிசலை குறைக்க திருப்பதியை போன்று திருவண்ணாமலை கோயிலில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு: ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Charitable Trusts Department ,Tirupati ,Tiruvannamalai temple ,Andhra Pradesh ,Karnataka ,Telangana… ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!