×

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆலங்காயம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும். குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். நல்லகுண்டாவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். ஆம்பூரில் ரூ.1 கோடியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

The post திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tirupattur ,Tirupattur district ,Alangayam Negnamalai ,Kumaramangalam ,Nallakunda… ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்