×

திருப்பதி கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கடத்தல்; போலீசார் விசாரணை..!!

ஆந்திரா: திருப்பதி கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கடத்தப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மீனா, சந்திரசேகர் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்திருந்தார். தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நேற்று இரவு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக அதிகாலை 2 மணிக்கு சந்திரசேகர், திருப்பதி பேருந்து நிலையம் வந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் கலைப்பில் தூங்கியுள்ளனர். திடீரென விழுத்து பார்க்கையில் அருகில் படுத்து கொண்டிருந்த சந்திரசேகரின் 2 வயது மகனை காணவில்லை.

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுவனை காணவில்லை. இதுகுறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனை செய்ததில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கி கொண்டு நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருப்பதி கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கடத்தல்; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Vosarawakan ,Tirupati Temple ,Andhra ,Meena ,Chennai ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு