×

திருப்பதி மலைப்பாதை புனரைமைப்பு: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், வாகன ஓட்டிகள் அதிக விழிப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும். பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, மலைப்பாதையை மூடாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி, குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சாலை புனரமைப்பு காரணமாக, வாகன ஓட்டிகள் ஆங்காங்கே குறுகிய நிறுத்தங்களுடன் மெதுவாக பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பயணத்தை பக்தர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்காக தேவஸ்தானம் சாலை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருப்பதி மலைப்பாதை புனரைமைப்பு: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirumala Tirupati Devasthanams ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...