×

திருச்செந்தூரில் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட் கிளையில் மனு!!

மதுரை: திருச்செந்தூரில் தரைக்கடை வியாபாரிகளை காலி செய்யும் நகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் விசாரணையில் குற்றவியல் நடுவர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே தரை வாடகைக்கு தினசரி வாடகை அடிப்படையில் 300 கடைகள் உள்ளன. கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நகராட்சிக்கு அலுவலக கட்டிடம், நூலகம், அறிவுசார் மையம் அமைக்க 80 கடைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

The post திருச்செந்தூரில் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட் கிளையில் மனு!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Tiruchendur ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி